Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்து பேசியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவர பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்த சீசன் மும்பை அணி சரியாக விளையாடவில்லை எனவும், ஹர்திக் பாண்டியா கேப்டன் சி சரி இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது.
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் கூட மும்பை புள்ளி விவர பட்டியலில் முன்னுக்கு செல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கும். ஆனால், மும்பை அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மும்பை மீதும் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் அதிகமானது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்று விமர்சித்து பேசியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இர்பான் பதான் அதில் பேசியதாவது ” மும்பை இந்தியன்களின் கதை இத்துடன் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தொடக்கத்தில் இதே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் முற்றிலும் சரியானது தான். மும்பை அணியை அவர் சரியாக வழிநடத்தவில்லை. கொல்கத்தா அணி 57 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்து தடுமாறி கொண்டு இருந்தது.
அந்த சமயத்தில் நீங்கள் சுழற்பந்துவீச்சாளர் நமன் திர் வைத்து கிட்டத்தட்ட 3 ஓவர்கள் வீச வைத்தீர்கள். அதன்பிறகு 6 -வது பவுலரை பயன்படுத்தி மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை நன்றாக விளையாட வைத்து பார்ட்னர்ஷிப் உருவாக்க வைத்துவிடீர்கள். ஆனால், அவர்களை சீக்கிரமாகவே அவுட் ஆக வைத்து இருக்கலாம். அணியில் இருக்கும் முக்கிய பந்துவீச்சாளர்களை மீண்டும் கொண்டு வந்து இருக்கவேண்டும். ஆனால் அதனை ஹர்திக் செய்யவில்லை. 150 ரன்கள் அடிக்க வேண்டிய கொல்கத்தாவை 170 ரன்கள் எடுக்க வைத்தீர்கள்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில், கேப்டன்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன் . என்னை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் ஒரு ஒருங்கிணைந்த அணியாக இப்போது இல்லை. இந்த விஷயத்தை அணியின் நிர்வாகம் கவனிக்க வேண்டும். வீரர்கள் கேப்டனை மதிக்க வேண்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை நான் மும்பை அணி ஆடிய போட்டிகளில் கண்டிப்பாக பார்க்கவில்லை என்று தான் சொல்வேன்” எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…