#IREvIND:தீபக் ஹூடா காட்டடி – 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

Published by
Edison

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து (IRE vs IND) அணிகள் மோதும் முதல் T20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார்.

இதனிடையே,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதனையடுத்து,களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. மழைக்காரணமாக 20 ஓவர்கள் கொண்ட ஆட்டம் 12 ஓவர்களில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில்,இரண்டாவது போட்டி நேற்று (ஜூன் 28) டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கியது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாம்சன் இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கம் முதலே சாம்சன் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவிக்க மறுபுறம் வந்த வேகத்திலேயே மார்க் அடேரின் பந்து வீச்சில் டக்கரிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து,அதிரடி காட்டி வந்த சாம்சன் 9 பவுண்டரிகள்,நான்கு சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் அடேரின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.ஆனால்,அதன்பின்னர் களம் கண்ட தீபக் ஹூடா சதம் அடித்து மாஸ் காட்டி வந்தார்.அதே சமயம்,சூர்யகுமார் யாதவ் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,அவரைத் தொடர்ந்து,தீபக்கும் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தீபக் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்திருந்தார்.இதுவே அணியிலுள்ள தனிநபரின் அதிகபட்ச ரன்களாகும்.

அதன்பின்னர்,கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 ரன்களிலும்,கார்த்திக்,அக்சர் ஹர்ஷல் படேல் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தை இழந்தனர்.இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணியினர் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தனர்.அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மார்க் அடேர் 3 விக்கெட்டுகளும்,ஜோசுவா லிட்டில்,கிரேக் யங் தலா இரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனையடுத்து,இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியினர், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தனர்.இதனால்,4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.ஆட்ட நாயகனாக தீபக் ஹூடா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார்,ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய்,உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

Recent Posts

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

9 mins ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

20 mins ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

1 hour ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

1 hour ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago