#IREvIND:தீபக் ஹூடா காட்டடி – 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து (IRE vs IND) அணிகள் மோதும் முதல் T20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார்.
இதனிடையே,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதனையடுத்து,களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. மழைக்காரணமாக 20 ஓவர்கள் கொண்ட ஆட்டம் 12 ஓவர்களில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில்,இரண்டாவது போட்டி நேற்று (ஜூன் 28) டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கியது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாம்சன் இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கம் முதலே சாம்சன் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவிக்க மறுபுறம் வந்த வேகத்திலேயே மார்க் அடேரின் பந்து வீச்சில் டக்கரிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து,அதிரடி காட்டி வந்த சாம்சன் 9 பவுண்டரிகள்,நான்கு சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் அடேரின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.ஆனால்,அதன்பின்னர் களம் கண்ட தீபக் ஹூடா சதம் அடித்து மாஸ் காட்டி வந்தார்.அதே சமயம்,சூர்யகுமார் யாதவ் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,அவரைத் தொடர்ந்து,தீபக்கும் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தீபக் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்திருந்தார்.இதுவே அணியிலுள்ள தனிநபரின் அதிகபட்ச ரன்களாகும்.
அதன்பின்னர்,கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 ரன்களிலும்,கார்த்திக்,அக்சர் ஹர்ஷல் படேல் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தை இழந்தனர்.இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணியினர் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தனர்.அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மார்க் அடேர் 3 விக்கெட்டுகளும்,ஜோசுவா லிட்டில்,கிரேக் யங் தலா இரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனையடுத்து,இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியினர், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தனர்.இதனால்,4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.ஆட்ட நாயகனாக தீபக் ஹூடா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார்,ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய்,உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
2⃣ Matches
1⃣5⃣1⃣ Runs@HoodaOnFire put on a stunning show with the bat & bagged the Player of the Series award as #TeamIndia completed a cleansweep in the 2-match T20I series against Ireland. ???? ???? #IREvIND pic.twitter.com/UuBKCx1HNj— BCCI (@BCCI) June 28, 2022