சாதனை செய்யாமல் சோதனை செய்து நடையைகட்டிய விராட் கோலி!0,9 என ஒற்றை இழக்க ரன்னில் வெளியேறினார்!

Default Image

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா,சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா,உமேஷ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பீட்டர் சாஸ், ஜார்ஜ் டாக்ரெல், கெவின் ஓ பிரையன், பாய்ட் ராங்கின், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன்,ஷன்னன் ,பல்ப்ரைனே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டியில் தோனி,தவான், புவனேஸ்வர் ,பூம்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதை தொடர்ந்து தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ராகுல் களமிறங்கினர். ஆனால் விராட் கோலி 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சோதனையாக மாறிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்:

Image result for virat kohli

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 57 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1983 ரன்களை குவித்திருந்த நிலையில் , 17 ரன்களை எடுத்தால் அதிவேக 2000 ரன்கள் என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் அவரால் முதல் போட்டியில் அதை எட்டமுடியாமல் போய்விட்டது.

எனினும் இன்னும் 17 ரன்களே தேவை என்பதால், அயர்லாந்துக்கு எதிராக இன்று நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிவிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்றும் அவர் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.இதனால் இங்கிலாந்துடனான போட்டியிலாவது விராட் கோலி சாதனை படைப்பாரா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது வரை இந்திய அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 57 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ரெய்னா 16,ராகுல் 22 ரன்களுடனும் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்