IRELAND VS INDIA:தோனியிடம் இருந்து தொப்பியை வாங்கிய சித்தார்த் கவுல்!
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
அதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
இதில் தவான் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.பின்னர் ரோகித் சர்மா 39 பந்துகளில் தனது 15 வது அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.தவான் 74 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ரெய்னா களமிறங்கினர்.அவர் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் பின்னர் கடைசி ஓவரில் ரோகித் சர்மா 97,தோனி 11,கோலி 0 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் இந்திய 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் அடித்தது.5 விக்கெட்டுகளை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 3 ரன்களில் சதத்தை தவற விட்டார்.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஜேம்ஸ் சனான் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்நிலையில் கடைசி மற்றும் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.முதல் போட்டிக்கு பின் இந்திய அணி கேப்டன் விராத் கோலி கூறுகையில்,பேட்டிங்கில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கும்.எனவே இன்றைய போட்டியில் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய போட்டியில் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.இதை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர் சித்தார்த் கவுலுக்கு இந்திய அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொப்பியை வழங்கியுள்ளார்.இதனால் சித்தார்த் இன்று போட்டியில் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் 20 ஓவர் இந்திய அணியின் 305வது வீரர் ஆவார்.
https://twitter.com/BCCI/status/1012699421958553603