IRELAND VS INDIA:இன்று இரண்டாவது இருபது ஓவர் போட்டி!மீண்டும் அடிவாங்குமா அயர்லாந்து?

Published by
Venu

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடுவதற்கு முன்  அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

அதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று ஐயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

இதில் தவான் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.பின்னர் ரோகித் சர்மா 39 பந்துகளில் தனது 15 வது அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.தவான் 74 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ரெய்னா களமிறங்கினர்.அவர் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் பின்னர் கடைசி ஓவரில் ரோகித் சர்மா 97,தோனி 11,கோலி 0 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் இந்திய 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் அடித்தது.5 விக்கெட்டுகளை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 3 ரன்களில் சதத்தை தவற விட்டார்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஜேம்ஸ் சனான் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் கடைசி மற்றும் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.முதல் போட்டிக்கு பின் இந்திய அணி கேப்டன்  விராத் கோலி கூறுகையில்,பேட்டிங்கில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கும்.எனவே இன்றைய போட்டியில் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Venu

Recent Posts

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

15 mins ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

34 mins ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

38 mins ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

54 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

1 hour ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

1 hour ago