ஐசிசி 19 வயதிற்கு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியான IRE vs USA இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் அமெரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்கம் முதலே அமெரிக்க அணி ஒரு முனையில் விக்கெட்டுகளையும் இழந்து மறு முனையில் மிகவும் திணறியே ரன்களை சேர்த்தது. இதனால் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ் பாலாலா 22 ரன்கள் எடுத்திருந்தார். அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ரூபன் வில்சன், ஆலிவர் ரிலே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 50 ஓவர்களில் 106 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து அணி.
கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…
முதல் ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க வீரரான ஜோர்டான் நீல் 4 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் 2.1 ஓவரில் கவின் ரோல்ஸ்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் வீழ்ந்த போது அயர்லாந்து அணி 5-2 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் சற்று நிலைத்து நின்று விளையாடினர்.
அயர்லாந்து அணி தரப்பில் ரியான் ஹண்டர் அரை சதம் விளாசினார். இதனால் இறுதியில் அயர்லாந்து அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எட்டி எளிதில் இந்த போட்டியை வென்றது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…