தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு அழைத்த அயர்லாந்து! மறுத்த சஞ்சு சாம்சன்.!
தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது, இதற்கு சாம்சன் மறுத்துள்ளார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அயர்லாந்து கிரிக்கெட் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு சாம்சன் வேறு நாட்டிற்கு விளையாடும் எண்ணமில்லை என்று கூறி மறுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட், சாம்சன் எங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்தால் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதற்கு சாம்சன் சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாட தொடங்கியதிலிருந்து வேறுநாட்டிற்கு விளையாடும் எண்ணம் வந்ததில்லை என்று இந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துள்ளார் என தகவல் வெளியானது.
இந்திய அணியில், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் சஞ்சு சாம்சன் என்னதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் தேர்வுக்குழுவினரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆசிய கோப்பை, உலகக்கோப்பை 2022 தொடரிலும் இந்திய அணியில் சாம்சன் சேர்க்கப்படவில்லை.
தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் தோற்கும் நிலையிலிருந்த அணிக்காக தனியாக இறுதிவரை போராடி 86* ரன்கள் குவித்தார், எனினும் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பிறகு நியூசிலாந்து ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஒரு போட்டியிலும் வாய்ப்பு கிடைக்க பெறாமல் தற்போது வங்கதேச ஒருநாள் தொடரிலும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.