#IPLNEWS: அடுத்தடுத்த அடி.. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா?

Default Image

சென்னை அணி வீரர் ஜடேஜா, நடப்பு சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல்.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக தான் ரவீந்திர ஜடேஜா களமிறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது தொடரிலிருந்தே விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் சென்னை அணிக்கு புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஜடேஜாவின் ஆட்டமும் சரி, அணி வெற்றியும் சரி சிறப்பாக அமையவில்லை. அப்போதும் பீல்டிங், பவுலிங் மற்றும் பேட்டிங் என மும்முனையில் கலக்கும் ஜடேஜாவுக்கு இந்தாண்டு சற்று சரிவை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் கேப்டன் பொறுப்பும் கூடியது. இதனால், தனது ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்த முடியாமல் அதிக ப்ரஸரில் இருப்பதாக தெரியவந்தது.

இதன் காரணமாக மீண்டும் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருக்க வேண்டும் என்று ஜடேஜா வலியுறுத்த, தோனியும் அதனை ஏற்றுக்கொண்டார். இதன்பின் ஜடேஜாவின் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதும் முறையாக அமையவில்லை. ஜடேஜா மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன. இந்த நிலையில், பீல்டிங்கின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், சற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் மற்ற அணிகளின் வெற்றி மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இருக்கும். குறிப்பாக சென்னை வரும் 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒரு சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்பதாகும். இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்