ஐபிஎல் 2023 க்கான மினி ஏலத்தில் பங்குபெறும் முதல் 5 செட் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் இந்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.
அதன் இறுதிக்கட்டமாக தற்போது 405 வீரர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். இந்த ஏலத்திற்கான முதல் 5 செட் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் செட்டில் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால்(ரூ.1கோடி), ஹாரி ப்ரூக்(ரூ.1.5 கோடி), ரஹானே(ரூ.50லட்சம்), ஜோ ரூட்(ரூ.1கோடி), ரிலே ரூஸோவ்(ரூ.2கோடி), கேன் வில்லியம்சன்(ரூ.2கோடி) ஆகியோரது பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2-வது செட்டில் ஆல்-ரௌண்டர்களான சாம் கர்ரன்(ரூ.2கோடி), கேமரூன் க்ரீன்(ரூ.2கோடி), ஷகிப் அல் ஹசன்(ரூ.1.5 கோடி), ஜேசன் ஹோல்டர்(ரூ.2கோடி), சிக்கந்தர் ராசா(ரூ.50லட்சம்), ஓடியன் ஸ்மித்(ரூ.50லட்சம்), பென் ஸ்டோக்ஸ்(ரூ.2கோடி) ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்ப்பட்டுள்ளன.
3-வது செட்டில் விக்கெட் கீப்பர்களான டாம் பேன்டன்(ரூ.2கோடி), ஹென்ரிக் க்ளாஸன்(ரூ.1கோடி), லிட்டன் தாஸ்(ரூ.50லட்சம்), குஷல் மெண்டிஸ்(ரூ.50லட்சம்), நிக்கோலஸ் பூரன்(ரூ.2கோடி), பில் சால்ட்(ரூ.2கோடி) ஆகியோரது பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
4-வது செட்டில் வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் ஜோர்டன்(ரூ.2கோடி), ஆடம் மில்னே(ரூ.2கோடி), ஜெய் ரிச்சர்ட்சன்(ரூ.1.5 கோடி), இஷாந்த் சர்மா(ரூ.50லட்சம்), ஜெய்தேவ் உனட்கட்(ரூ.50லட்சம்), ரீஸ் டாப்லி(ரூ.75லட்சம்) ஆகியோரும்,
5-வது செட்டில் ஸ்பின் பௌலர்களான அகில் ஹுசைன்(ரூ.1கோடி), மயங்க் மார்கண்டே(ரூ.50லட்சம்), முஜீப் உர் ரஹ்மான்(ரூ.1கோடி), அடில் ரஷீத்(ரூ.2கோடி), ஆடம் ஜாம்பா(ரூ.1.5 கோடி), டப்ரைஸ் ஷம்ஸி(ரூ.1கோடி) ஆகியோரது பெயர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…