#IPLAuction:ஐபிஎல் உரிமம் யாருக்கு? – தொடங்கியது மெகா ஏலம்!

Default Image

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.

இந்த வேளையில்,இந்தியன் பிரீமியர் லீக் மீடியா உரிமை ஏலப் போட்டியில் இருந்து அமேசான் வெளியேறியதால்,பிற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை ஒளிபரப்பு செய்வது,B தொகுப்பு என்பது இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வது,C பேக்கேஜ் என்பது எக்ஸ்க்ளூசிவ் போட்டிகளை மட்டும் ஓடிடி ஒளிபரப்பு செய்வது,கடைசியாக,பேக்கேஜ் D என்பது இந்தியாவைத் தவிர உலகின் பிற பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த (டிவி மற்றும் டிஜிட்டல்) உரிமம் பெறுவதாகும்.

ஒவ்வொரு பேக்கேஜ்ஜின் அடிப்படை விலை:

பேக்கேஜ் A – ஒரு போட்டிக்கு ரூ.49 கோடி
பேக்கேஜ் B – ஒரு போட்டிக்கு ரூ.33 கோடி
பேக்கேஜ் சி – ஒரு போட்டிக்கு ரூ.11 கோடி
பேக்கேஜ் D- ஒரு போட்டிக்கு ரூ.3 கோடி என நான்கு பிரிவுகளையும் சேர்த்து ஐபிஎல் உரிமத்திற்கான அடிப்படை விலை 32,890 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,ஐபிஎல் ஒளிபரப்பு  உரிமத்தை வழங்குவதன்மூலம் ரூ.60,000 கோடி வரை வருமானம் ஈட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்