டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஐபிஎல் 2021 தொடரின் தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏப்ரல் 10ஆம் தேதி மோதி 7 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன்,டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தனது 2வது போட்டியில் மோத உள்ள இந்த சமயத்தில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
வேகப்பந்து பவுலரான அன்ரிச், கொரொனா பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையுடன் இந்தியா வந்தார்.அதில் கொரொனா நெகடிவ் என இருந்தது.அவருடன் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க வீரர்கள், காகிசோ ரபடா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி மற்றும் குவின்ட டீ காக் ஆகியோருக்கும் கொரொனா நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரபடாவும் டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்ததில்,எதிர்பாராத விதமாக அன்ரிச்சிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனையடுத்து, இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அன்ரிச் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…