ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படையிலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேஸன் ராய் உள்ளிட்ட 7 வெளிநாட்டு வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 தமிழக வீரர்களும் போட்டியில் உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த ஏலம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரராக இருக்கலாம். கைவசம் ரூ.19.90 கோடி உள்ளது.
மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் இடம் ரூ.13.4 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.53.20 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.10.75 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.15.35 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.37.85 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.35.40 கோடி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.10.75 கோடி கைவசம் உள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…