#IPLAuction: கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்!
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற உள்ளது.
2023-ம் ஆண்டுக்கான 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 87 வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்ய கொச்சியில் இன்று 3 மணிக்கு மினி ஏலம் நடைபெற உள்ளது.
இந்த மினி ஏலம் பட்டியலில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் உள்ளனர். இதில், ஆல் ரவுண்டர் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன், சிகந்தர் ராசா மற்றும் ஹோல்டர் ஆகியோரை எடுக்க 10 அணிகளின் நிர்வாகம் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்று இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் அதிக விலையில் போக வாய்ப்பு உள்ளது. இந்த மினி ஏலத்தில் என்.ஜெகதீசன், முருகன் அஸ்வின் உள்பட தமிழக வீரர்கள் 16 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்த மினி ஏலம் ஐபிஎல்-லில் பங்கேற்கும் 10 அணிகளின் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.