IPL2024 : சன்ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணி ரன்கள் 67 வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, விண்ணை முட்டும் அளவுக்கு ரன்களை குவித்து வரும் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே டெல்லி அணி பந்துவீச்சை பவுண்டரிக்கு சிதறடித்தது.
ஆரம்பம் முதலில் அதிரடி காட்டிய ஹைதராபாத் அணி 6 ஓவர் முடிவில் 120 ரன்கள் கடந்து சாதனை படைத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஹெட் 32 பந்துகளுக்கு 89 ரண்களும் அபிஷேக் ஷர்மா வெறும் 12 வதுகளுக்கு 46 ரகங்களும் விளாசினார் அடுத்து வந்த மார்க்ரம் ஒரு ரன்னில் அவுட் ஆக கிளாசான் 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட டெல்லி அணி ரன்வேகத்தை கட்டுப்படுத்தியதால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது ஹைதிராபாத். 20 ஓவரில் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் அடுத்தடுத்து அதிரடி காட்டி விளையாடியது. இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது டெல்லி அணி.
இறுதியில் 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ஹைதிராபாத் அணியிடம் தோல்வியடைந்தது டெல்லி அணி. அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் எடுத்து இருந்தார். அபிஷேக் படேல் 42 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து இருந்தனர்.
ஹைதிராபாத் அணி சார்பாக நடராஜன் 4 ஓவர் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்து இருந்தார். மயங்க்., நிதிஷ் ரெட்டி, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…