IPL2023: மொகாலியில் இன்று 3.30மணிக்கு, பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை.!
ஐபிஎல் 2023 தொடரில் மொகாலியில் இன்று இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை.
16-வது ஐபிஎல் தொடர் நேற்று குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இன்று சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு மொகாலியில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. தவான் தலைமையிலான பஞ்சாப் அணியில், ராஜபக்ஷா, ஷாருகான், அர்ஷ்தீப் சிங், சிக்கந்தர் ராசா, மற்றும் சாம் கரன் ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
பேர்ஸ்டோ இந்த ஐபிஎல் தொடரில் விலகியுள்ளது பஞ்சாப் அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லிவிங்ஸ்டன் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், நிதிஷ் ராணா தலைமையில் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ரஸ்ஸல், ஷர்துல் தாக்குர், பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ் என பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சம பலத்துடன் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
மொகாலியில் கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 1 முறையும், இரண்டாவதாக பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ்(உத்தேச அணி): ஷிகர் தவான் (C), பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா (W), சாம் கரன், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ராகுல் சாஹர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(உத்தேச அணி): ரஹ்மானுல்லா குர்பாஸ் (W), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (C), மந்தீப் சிங்/என் ஜெகதீசன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி.