IPL2023: சுதர்சன், விஜய் சங்கர் அதிரடி; கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய GT vs KKR போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி 204 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா(17 ரன்கள்) மற்றும் கில்(39 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். சுனில் நரைன் வீசிய பந்தை, சாஹா அடித்த போது ஜெகதீசன் அந்த கேட்ச் வாய்ப்பை அருமையாக எடுத்தார்.
ICYMI!
‘Catch it’ was the shout and CATCH it was by @Jagadeesan_200 ????????#TATAIPL | #GTvKKR pic.twitter.com/tMFfyz9Fb4
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
அதன் பின் இறங்கிய இளம்வீரர் சாய் சுதர்சன்(53 ரன்கள்) அதிரடி காட்டினார். தொடர்ந்து விளையாடிய சுதர்சன் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து இறங்கிய விஜய் சங்கர்(63* ரன்கள்) பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி, குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.