#IPL2023: போட்டிக்கான அட்டவணை வெளியீடு..! முதல் போட்டி யாருக்கு தெரியுமா?..!
ஐபிஎல் 2023-க்கான போட்டி நடைபெறும் தேதி குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
2023- ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐபிஎல் 2023 தொடரின் 16-வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் முதல் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் மார்ச் 31 ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.