IPL2023: கடைசி ஓவரில் ரின்கு சிங் அதிரடி; கொல்கத்தா த்ரில் வெற்றி.!
ஐபிஎல் தொடரின் இன்றைய GT vs KKR போட்டியில் கொல்கத்தா அணி அதிரடி வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணியில், சாய் சுதர்சன்(53 ரன்கள்) மற்றும் விஜய் சங்கர்(63* ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
205 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களான குர்பாஸ்(15 ரன்கள்) மற்றும் ஜெகதீசன்(6 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வெங்கடேஷ் மற்றும் நிதிஷ் ராணா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 100 ரன்கள் சேர்த்தனர்.
அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதிஷ் ராணா 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் 83 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆட்டம் கொல்கத்தா பக்கம் இருந்த நிலையில், ரஷீத் கான் அற்புதமாக பவுலிங் செய்து ரசல், நரைன் மற்றும் ஷர்துல் என ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
.@rashidkhan_19 ???? Hat-trick!
That was simply sensational! ???? ????
Follow the match ▶️ https://t.co/G8bESXjTyh#TATAIPL | #GTvKKR | @gujarat_titans pic.twitter.com/sSpYyFcO3S
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
இறுதி ஓவரில் கொல்கத்தா அணியின் ரின்கு சிங்(30 ரன்கள்), அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்களும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.