#IPL2023 : ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று ஃபீலடிங்கை தேர்வு..!
ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் குஜராத் அணி முதல் அணியாக பிளேஆப்ஸ்-க்கு முன்னேறியுள்ளது. இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் ராஜஸ்தான் அணி ரன்ரேட்(+0.140) அடிப்படையில் பஞ்சாப் அணியை(-0.308) விட முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளேஆப் சுற்றுக்கு செல்ல மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும் மற்றும் மற்ற அணிகளின் வெற்றி/தோல்வியை பொறுத்து தான் பிளேஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகும். இந்த நிலையில் தற்போது, ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது.