ஐபிஎல் தொடரின் இன்றைய LSG-SRH போட்டியில் லக்னோ அணி, 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள், லக்னோவின் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மோதின. டாஸ் வென்று ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அன்மோல்ப்ரீத் சிங்(31 ரன்கள்) மற்றும் ராகுல் த்ரிபாதி(34 ரன்கள்) தவிர, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் முதல் பந்தில் டக்அவுட், மேலும் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஹாரி ப்ரூக் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் ஓரளவு பொறுப்புடன் விளையாடி 16 ரன்கள் குவிக்க, கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி அப்துல் சமாத் 21 ரன்கள் குவித்தார், இதனால் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில், க்ருனால் பாண்டியா 3 விக்கெட்களும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் கைல் மேயர்ஸ் 13 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ராகுல் (35 ரன்கள்) மற்றும் பந்துவீச்சில் ஜொலித்த க்ருனால் பாண்டியா(34 ரன்கள்) பேட்டிங்கிலும் அசத்தினார்.
SRH அணி சார்பில் அடில் ரஷீத் 2 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார், பரூக்கி, உம்ரான் மாலிக் மற்றும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முடிவில் லக்னோ அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம் லக்னோ அணி, தனது இரண்டாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…