IPL2023: ராகுல், க்ருனால் அபாரம்; லக்னோ அணி கூல் வெற்றி.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG-SRH போட்டியில் லக்னோ அணி, 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள், லக்னோவின் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மோதின. டாஸ் வென்று ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அன்மோல்ப்ரீத் சிங்(31 ரன்கள்) மற்றும் ராகுல் த்ரிபாதி(34 ரன்கள்) தவிர, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் முதல் பந்தில் டக்அவுட், மேலும் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஹாரி ப்ரூக் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் ஓரளவு பொறுப்புடன் விளையாடி 16 ரன்கள் குவிக்க, கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி அப்துல் சமாத் 21 ரன்கள் குவித்தார், இதனால் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில், க்ருனால் பாண்டியா 3 விக்கெட்களும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் கைல் மேயர்ஸ் 13 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ராகுல் (35 ரன்கள்) மற்றும் பந்துவீச்சில் ஜொலித்த க்ருனால் பாண்டியா(34 ரன்கள்) பேட்டிங்கிலும் அசத்தினார்.

SRH அணி சார்பில் அடில் ரஷீத் 2 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார், பரூக்கி, உம்ரான் மாலிக்  மற்றும்   தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முடிவில் லக்னோ அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம் லக்னோ அணி, தனது இரண்டாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்