டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் குஜராத் அணி முதல் அணியாக பிளேஆப்ஸ்-க்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. பஞ்சாபிற்கு 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இரண்டிலும் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டும் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விக்காக காத்திருக்க வேண்டும். அதன்பிறகு பஞ்சாபின் பிளேஆப் வாய்ப்பு தெளிவாகும்.
அதே நேரத்தில் டெல்லி அணி கிட்டத்தட்ட பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறினாலும் இன்றைய போட்டியில் வென்றால் பஞ்சாப் அணிக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் விளையாடியுள்ள நிலையில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைக்கு நடைபெறும் போட்டி பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…