IPL2023: பந்துவீச்சில் மிரட்டிய லக்னோ; SRH அணி 121 ரன்கள் குவிப்பு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG-SRH அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 121/8 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள், லக்னோவின் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அன்மோல்ப்ரீத் சிங்(31 ரன்கள்) மற்றும் ராகுல் த்ரிபாதி(34 ரன்கள்) தவிர, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் முதல் பந்தில் டக்அவுட் ஆனார், மேலும் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஹாரி ப்ரூக் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி தடுமாறியது.
ஓரளவு பொறுப்புடன் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அப்துல் சமாத் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 21 ரன்கள் குவித்தார், மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. முடிவில் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்துள்ளது. லக்னோ அணியில், க்ருனால் பாண்டியா 3 விக்கெட்களும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.