இன்று கோலாகலமாக தொடங்கும் ஐபிஎல் திருவிழாவில், அறிமுக விழா நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோரின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் லீக், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி 2 மாதங்கள் நடைபெறும். மொத்தம் 8 அணிகளுடன் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் தற்போது 10 அணிகள் பங்குபெறும் மிகப்பெரிய தொடராகவும், உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளதாகவும் மாறியுள்ளது.
இன்று நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுவதற்கு முன்பாக, போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியமான மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பார்வையாளர்களுக்காக பிரபலங்களை வைத்து இந்த அறிமுக விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதில், பான்-இந்திய நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா மற்றும் பிரபல பாடகர் அரிஜித் சிங் ஆகியோரின் நிகழ்ச்சி கலை ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறது. அதாவது, போட்டி தொங்குவதற்கு முன்பு மாலை 6 மணிக்கு இந்த அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் களம் காணுகின்றன. கடந்த முறை நழுவவிட்ட வாய்ப்பை இந்த முறை விடக்கூடாது என்ற முனைப்பில் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கே அணியும், கடந்த சீசன் வெற்றியுடன் தொடங்க குஜராத் அணியும் இன்று களமிறங்குகின்றன.
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு…