இன்று தொடங்கும் ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி விளையாடுவதில் சந்தேகம் என தகவல்.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 16-வது ஐபிஎல் தொடர் இன்று குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி இன்னும் 2 மாதங்கள் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மாலை 6 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் தொடக்கவிழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து போட்டி இரவு 7.30க்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியின் போது தோனி, இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் நீ கேப்(Knee Cap) அணிந்திருந்தார், இதனால் முதல் போட்டியில் தோனி ஓய்வு எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தோனிக்கு பதிலாக ருதுராஜ் அல்லது ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர், முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…