IPL2023: முதல் போட்டியில் தோனி விளையாடுவது உறுதி; சிஎஸ்கே சிஇஓ.!
இன்று தொடங்கும் ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் தோனி விளையாடுவது உறுதி என சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 16-வது ஐபிஎல் தொடர் இன்று குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி இன்னும் 2 மாதங்கள் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் இடது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் தோனி விளையாடமாட்டார் என தகவல் வெளியான நிலையில், இன்றைய போட்டியில் தோனி நிச்சயமாக விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பயிற்சியின் போது தோனி, இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் நீ கேப்(Knee Cap) அணிந்திருந்தார், இதனால் முதல் போட்டியில் தோனி ஓய்வு எடுக்கக்கூடும் என்று கூறப்பட்டது.