#IPL2023 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு…!
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில், லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிற நிலையில் இன்னும் பிளேஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி(குஜராத்) மட்டுமே இதுவரை தகுதி பெற்றுதாது. இந்த நிலையில், தற்போது சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கியுள்ளது.
எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடும் நிலையில், சென்னை அணியைப் பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன்(NRR +0.381) 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் நேரடியாக பிளேஆப் சுற்றுக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.