#IPL2022: இன்றைய போட்டி.. கொல்கத்தா Vs பஞ்சாப் பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மூன்று மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று 8-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.
ஆனால், 2வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது. மறுபுறம் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து. இன்று தனது இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. எனவே, கொல்கத்தா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடனும், பஞ்சாப் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியுடன் கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.