2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் ஆகிறது டாடா குழுமம்.
ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோவிடம் இருந்து ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது. ஐபிஎல் 2022ஆம் வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சர் விவோவிலிருந்து டாடாவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிதாக லக்னோ, அகமதாபாத் என 2 அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிதாக இடம்பெறும் இரு அணிகளும் 3 வீரர்களைத் தக்கவைக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் ஆகிறது டாடா குழுமம்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…