#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்று எங்கு, எப்பொழுது நடைபெறுகிறது? முழு விபரம் இதோ!
ஐபிஎல் தொடரில் தற்பொழுது அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் மும்பை, புனேவில் நடந்து முடிந்தது. இதில் 10 அணிகள் விளையாடிய நிலையில், அதில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என மொத்தமாக 4 அணிகள் தகுதி பெற்றது. இந்த பிளே ஆப்ஸ் சுற்றில் மொத்தமாக 3 போட்டிகள் நடைபெறும். அதில் முதலில் குவாலிபயர் – 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறும்.
இதில் முதல் குவாலிபயர் போட்டி, வரும் 24-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுளள்து. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கும், தோல்வியை சந்திக்கும் அணி, அடுத்ததாக நடைபெறும் இரண்டாம் குவாலிபயர்-க்குள் நுழையும். மேலும் கொல்கத்தாவில் வரும் 25-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி, இரண்டாம் குவாலிபயர்க்கும், தோல்வியை சந்திக்கும் அணி எலிமினேட் ஆகிவிடும்.
அதனைதொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 27-ம் தேதி இரண்டாம் குவாலிபயர் நடைபெறவுள்ளது. அதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கும், தோல்வியை சந்திக்கும் அணி வெளியேறிவிடும். முதல் குவாலிபயரில் வெற்றிபெற்ற அணியும், குவாலிபயர் 2-ல் வெற்றிபெற்ற அணியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 29-ம் தேதியன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி, 15-வது ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றும்.