ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 48-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடி வருகிறது. அந்தவகையில் 9 போட்டிகளில் விளையாடிய குஜராத் அணி, 1 போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணி, 9 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் 5-ம் இடம் வரை முன்னேற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் அதிரடியாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமன் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தேவாதியா, பிரதீப் சங்வான் ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, அல்சாரி ஜோசப்.
பஞ்சாப் கிங்ஸ்:
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…