ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 206போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 13 போட்டிகளும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. அதேபோல ராஜஸ்தான் அணி, 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் பெங்களூர் அணி, மீண்டும் 2-ம் இடத்திற்கு வாய்ப்புள்ளதால்இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
அனுஜ் ராவத், ஃபாப் டு பிளெஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…