ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெரும்.
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 23-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனைதொடர்ந்து குஜராத் அணி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறுவதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், ராஸ்ஸி வேன் டெர் டுசென், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மேயர், ரியான் பராக், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…