#IPL2022: கே.எல்.ராகுலுக்கு 3வது முறையாக அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறியதாக கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிப்பு.
ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இறுதி வரையில் களத்தில் இருந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நடப்பு ஐபிஎல்லில் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றது. இந்த நிலையில், ஐபிஎல் 2022-இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் 3வது முறையாக கண்டிக்கப்பட்டார். அதாவது, நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறி மெதுவதாக ஓவர் வீசியதாக ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆர்சிபி அணிக்கு எதிராக நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுலுக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று ஏப்ரல் 16 அன்று MI-க்கு எதிராக LSG இன் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற போட்டியிலும் ஓவர் ரேட் காரணமாக கேஎல் ராகுலுக்கு மீண்டும் மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025