#IPL2022: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் போட்டி – டாஸ் வென்ற கொல்கத்தா அணி!

Default Image

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு.

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சென்னை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச போவதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்தார். அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி 25% ரசிகர்களுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. சென்னை அணியில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பு இல்லாமல் ஒரு வீரராக தோனி களமிறங்கியுள்ளார்.

இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் மோதிய நிலையில், சிஎஸ்கே 17 போட்டிகளும், கொல்கத்தா 8 போட்டிகளும் வெற்றி பெற்றது. அதுவும் கடந்த சில வருடங்களில் 5 போட்டிகளில் சென்னை 4, கொல்கத்தா 1 வெற்றி பெற்றுள்ளது. வான்கனடே மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் அணிகளிலேயே வான்கனடே மைதானத்தில் குறைந்த வெற்றி சதவீதத்தை வைத்துள்ள அணி என்றால் கொல்கத்தா தான். அதே சமயம் சென்னை அணிக்கு வான்கடே ராசியான மைதானமாகவே விளங்கியுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டியில் 4 முறை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணி (playing 11):

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா அணி (playing 11):

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்