ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்.
நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 22 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இறுதி போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு இறுதிப்போட்டி அந்த மைதானத்தில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…