ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 62-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்று நெருங்கி வருகிறது. அதில் 2 அணிகள் பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்ததை தொடர்ந்து, ஒரு அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது. அந்தவகையில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு குவாலிபை ஆன ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி, இன்று மதியம் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் சென்னை அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. அதேபோல குஜராத் அணி, 9 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் அணிக்கு தகுதிபெற்றது. மேலும், முதலிடத்தை தக்க வைக்க சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எதிர்பார்க்கப்படும் XI:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமன் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், முகமது ஷமி.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…