ஐபிஎல் தொடர், இந்தியாவில் நடைபெறும் என்றும், அது வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் நடந்த ஐபிஎல் போட்டிகள் போல எந்த போட்டியும் இருந்ததில்லை. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணியும் தங்களின் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனைதொடர்த்து இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் மினி ஏலம் தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது போல இந்தாண்டு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புகள் கம்மி என்று கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவிலே போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்தாண்டு ஐபிஎல் தொடர் வழக்கம் போல ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…