#IPL2021 : இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா…!! முதல் போட்டியே சென்னையில்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
14 வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 14 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.
மேலும், இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஐபிஎல் வரலாற்றில் சோகமான செய்தி என்னவென்றால், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. மேலும் ரசிகர்களும் மைதானத்தில் போட்டியை கண்டுகளிக்க அனுமதி வழங்காததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதும் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.