#IPL2021 : பஞ்சாப் – கொல்கத்தா மோதல்..!! வெற்றிபெற்று முன்னுக்கு செல்லுமா கொல்கத்தா..??

இன்றயை ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 21- வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 27 போட்டிகள் மோதியதில் 9 முறை பஞ்சாப் அணியும், 18 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகமான வெற்றியை கொல்கத்தா அணிதான் வைத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதைபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இன்று நடைபெறும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டி என்று கூறப்படுகிறது. போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியில் முன்னுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025