2-ம் இடத்தில் டெல்லி.. மீண்டும் ஆரஞ்சு கேப் வாங்கிய தவான்; பர்பிள் கேப்பை வைத்திருப்பது இவர்தான்!
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்பிள் கேப்பை வைத்திருக்கும் வீரர்கள் குறித்து காணலாம்.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 16.3 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், இந்த போட்டியில் தவான் 46 ரன்கள் அடித்து, மீண்டும் ஆரஞ்சு கேப்பை தக்கவைத்துக் கொண்டார்.
புள்ளிப்பட்டியல்:
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணி, 10 புள்ளிகள் பெற்று (+1.475 ரன்ரேட்) புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதனைதொடர்ந்து, பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளி, 10 புள்ளிகளுடன் டெல்லி அணி (+0.466 ரன்ரேட்) இரண்டாம் இடத்தில் உள்ளது. 3-ம் இடத்தில் 10 புள்ளிகளுடன் (+0.089 ரன்ரேட்) பெங்களூர் அணியும், 4-ம் இடத்தில் 6 புள்ளிகளுடன் (+0.071 ரன்ரேட்) மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அதனைதொடர்ந்து 5,6,7-ம் இடங்களில் 4 புள்ளிகளுடன் (-0.608 ரன்ரேட்) கொல்கத்தா, (-0.690 ரன்ரேட்) பஞ்சாப், ரன்ரேட்) ராஜஸ்தான் அணியும், கடைசி இடத்தில் 2 புள்ளிகளுடன் (-0.264 ரன்ரேட்) ஹைதராபாத் அணி உள்ளது.
பர்பிள் கேப்:
பெங்களூர் அணியின் டெத் ஓவர் எஸ்பர்ட் ஹர்ஷல் படேல், 6போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பிள் கேப்பை வைத்துள்ளார். 13 விக்கெட்களை வீழ்த்தி ஆவேஸ் கான் இடண்டாம் இடத்திலும், 11 விக்கெட்களை வீழ்த்தி கிறிஸ் மோரிஸ் மூன்றாம் இடத்திலும், 11 விக்கெட்களை வீழ்த்தி ராகுல் சஹர் நான்காம் இடத்தில் உள்ளார்.
ஆரஞ்சு கேப்:
ஐபிஎல் தொடரில் நடப்பாண்டில் அதிரடியான பார்மில் இருக்கும் ஷிகர் தவான், 311 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப்பை வைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் 270 ரன்களுடன் சென்னை அணியின் வீரர் டுப்ளஸிஸ், 269 ரன்களுடன் பிரித்வி ஷா 3-ம் இடத்திலும், 240 ரன்கள் குவித்து நான்காம் இடத்தில் கே.எல்.ராகுலும், 5-ம் இடத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உள்ளனர்.