#IPL2021: பெயரை மாற்றிய பஞ்சாப்.. ஆர்ச்சர் இல்லாத ராயல்ஸ்.. வெற்றிபெறப்போவது யார்?
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் 2021:
14-ம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ராஜஸ்தான் அணி ஒருமுறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் பஞ்சாப் அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை. இதனால் இம்முறையானது கோப்பையை வெல்லும் நோக்குடன் பஞ்சாப் அணி தீவிரமாக பயிற்சிப்பெற்று வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் சஞ்சு சாம்சம், இம்முறை கேப்டனாக பதவிவகிக்கிறார். கடந்தாண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. பேட்டிங்கில் ராஜஸ்தான் அணிக்கு சிறப்பாக இருக்கும் நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக வெளியேறியது, அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்த இடத்தை கிறிஸ் மோரிஸ் ஆக்கிரமிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்திய வீரர்களான உனத்கத், கார்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவாதியா ஆகியோர் அணிக்கு பெரிய பலமாக இருக்கின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் அணியை பொறுத்தளவில், பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பக்க பலமாக உள்ளது. டாப் ஆடரை பொறுத்தளவில் ராகுல், மயங்க் அகர்வால், கெயில் பலம் பலம் சேர்த்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் நிகோலஸ் பூரன் கூடுதலாக பலம் சேர்க்கிறார். பந்துவீச்சில் முகமது ஷமி, ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், ஆல் ரவுண்டர் பேபியன் ஆலன், மற்றும் மோசிஸ் ஹென்ரிக்ஸ் என மிடில் ஓவர்களில் பக்க பலமாக உள்ளது. இதனால் இன்றைய போட்டி, கடுமையாக போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.