வெற்றி யாருக்கு? இன்று முட்டும் சென்னைvsடெல்லி!ருசிக்குமா?

Default Image

மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனால் 2வது ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் தலைநகர்கள் இரண்டும் மோதுகின்றன.ஆம் இன்று சென்னை-டெல்லி பலபரீச்சை நடத்துகிறது.

சென்னை அணியில் அம்பத்தி ராயுடு லேசான தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. தொடக்க வீரர் முரளிவிஜய் இரு ஆட்டத்திலுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்பட்டுத்திவிட்டார்.அதே போல் வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் 4 சிக்சர்களை அள்ளி வழங்கினார். இதனால் சென்னை அணியில் இன்று சில மாற்றங்களுடன் களமிரங்கும் என்று தெரிகிறது. மூத்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் இன்று நடக்கும் ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 217 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 7வது வரிசையில் ஆடியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கேப்டன் டோனி முன்கூட்டியே இறங்கி பழைய அதிரடியை காட்டுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்பிக்கை அளிக்கும் வகையில் பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் நிலையான ஆட்டத்தை (58, 72 ரன்)சென்னை அணிக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். ஜடேஜா, பியுஷ் சாவ்லா ஆகியோர் சுழலில் முத்திரை பதிக்க வேண்டிய நெருக்கடியில் இன்றைய போட்டியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்