ஆடுகளத்தில் அசத்தும் அசுர சுழல்…! சிக்கி சிதறும் அணிகள்

Published by
kavitha

கடந்த 2018-19 வருடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் ஐபிஎல் போட்டியில் களமிரங்கியவர். இவருடைய கேப்டன்ஷிப்பில் 28 ஆட்டங்களில் பஞ்சாப் 12 வெற்றி, 16 தோல்வி கண்டது. 2018 புள்ளிகள் பட்டியலில் 7 இடத்திற்கும் அதே போல்2019 வருடம் 6வது இடத்தையும்மும் பிடித்தது.

2 வருடங்களிலுமே கடைசி ஆட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப் சுற்றுக்கு அவ்அணியால் தகுதி பெற முடியாமல் வெளியேறியது.ஆனால் இந்தாண்டு புதிய அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுக்கப்பட்டது. இதனால்  அஸ்வின் டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.2018ல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குப் பஞ்சாப் அணி தேர்வு செய்தது . இந்நிலையில் இவ்வருடம் இதே தொகைக்கே அஸ்வினை தில்லி அணி பெற்றுக்கொண்டு தன் வசப்படுத்தியது.

இந்நிலையில் புதிய அணி அனுபவத்தோடு களமிரங்கி விளையாடும் வரும் அஸ்வின் தனது சுழலை சிறப்பாகச் சுழற்றி பந்துவீசி வருகிறார்.மேலும் புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி  முதலிடம் வகித்து வருகிறது.இதற்கு முக்கியக் காரணமாக அஸ்வின் இருந்து வருகிறார்.அஸ்வின் இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். அவருடைய எகானமி 6.90 .

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் குறைந்தது 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்களில் குறைந்த எகானமி உள்ள வீரர்களில் அஸ்வின் 4வது இடத்தில் உள்ளார்.

மேலும் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணி விக்கெட் எடுக்கத்  தடுமாறி வரும் நிலையில் டெல்லிக்கு விடுவித்த அஸ்வின், தில்லி அணிக்காக சிறப்பாகப் பந்துவீசி  வருகிறார். இவ்வருடம் பஞ்சாப் அணி எடுத்த பல முடிவுகள் தவறுதலாகவே இருக்கின்றது என்று விமர்சனங்கள் இருந்து வருகிறது.மேலும் அந்த அணி அஸ்வினை விடுவித்தது பெரிய தவறு என்பதை இத்தருணத்தில் உணந்திருப்பார்கள்.

தில்லி அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதே உற்சாகத்துடன் தனது சுழல் வீச்சாளால் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க சந்தர்பங்கள்  உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
Published by
kavitha

Recent Posts

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

49 mins ago

நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…

51 mins ago

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

1 hour ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…

1 hour ago

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…

2 hours ago

கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

3 hours ago