#IPL2020: மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ராகுல் திரிபாதி இருவரும் இறங்க, வந்த வேகத்தில் ராகுல் திரிபாதி 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய ராணா 5 தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர், மத்தியில் களம் கண்ட மோர்கன், பாட் கம்மின்ஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். கடைசிவரை களத்தில் பாட் கம்மின்ஸ் 53, மோர்கன் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றனர்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி 149 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , ரோஹித் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த ரோஹித் 35 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.
இதைத்தொடர்ந்து, தொடக்க வீரராக இறங்கிய குயின்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் அரைசதம் விளாசி 78* ரன்கள் குவித்து கடைசிவரை காலத்தில் நின்றார். ஹர்திக் பாண்டியா 21* ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை அணி 16.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மும்பை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.