#IPL2020: இறுதி போட்டியை காண வந்த மலையாள சூப்பர் ஸ்டார்..!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலே மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கோக்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதைத்தொடர்ந்து இறங்கிய ரஹானே 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடி வந்த ஷிகர் தவான் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், இப்போட்டியை காண மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வருகை தந்துள்ளார்.
டெல்லி அணி 13 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025