#IPL2020: 163 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி..!

Default Image

ஐபிஎல் தொடரில் 35-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,
ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய திரிபாதி 23 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, நிதீஷ் ராணா இறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 36 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.

பின்னர் களம் கண்ட ரஸ்ஸல் வந்த வேகத்தில் 9 ரன் எடுத்து வெளியேற மத்தியில் இறங்கிய  மோர்கன், தினேஷ் கார்த்திக் அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். இதனால்,  மோர்கன் 34 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

தினேஷ் கார்த்திக் 29* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். 164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay