#IPL2020: நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட ஏபி டி.. கொல்கத்தாவிற்கு 195 ரன்கள் இலக்கு..!
இன்றைய 28-வது போட்டியில் பெங்களூர் Vs கொல்கத்தா அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த படிக்கல் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்த சில ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ஆரோன் பிஞ்ச் அரைசதம் அடிக்கமால் 47 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் களமிறங்க தொடக்க வீரர்கள் போல அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இதனால், இருவரும் கடைசிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றனர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தனர்.
கோலி 33* மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் 73* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 195 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.