#IPL2020:KKR vs MI இன்றைய போட்டிக்காக கடின பயிற்சியில் பும்ரா..!
இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான மும்பை அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் மும்பை களமிறங்கவுள்ளனர்.
மேலும் அதை போல் கொல்கத்தா அணி தரப்பில் அதிரடி வீரர் மோர்கன் இருக்கிறார்.இவர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த அதிரடி ஆட்டக்காரர். அதே போல் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப் மேலும் ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் அணியில் இருப்பதால் நம்பிக்கையோடு மும்பையின் சவாலை எதிர்கொள்வார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார், அவர் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
How many hours for #KKRvMI, Boom? ????#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #KKRvMI @Jaspritbumrah93 pic.twitter.com/9rTdpB3KDr
— Mumbai Indians (@mipaltan) September 23, 2020